மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
20-Sep-2024
உளுந்துார்பேட்ட : திருநாவலுார் அருகே பெட்டிக்கடையில் 10 கிலோ குட்கா பதுக்கிய பெட்டிக் கடைக்காரர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பிள்ளையார்க்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பூராசாமி, 60; பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கடையில் சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 10 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, பூராசாமி மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். மேலும், அவருக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்த எலவனாசூர்கோட்டை பகுதியைச் சேர்ந்த கேசவன், 52; என்பவரையும் கைது செய்தனர்.
20-Sep-2024