உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் பள்ளியில் நாய் புகுந்து 3 மாணவர்களை கடித்ததால் பரபரப்பு

சங்கராபுரம் பள்ளியில் நாய் புகுந்து 3 மாணவர்களை கடித்ததால் பரபரப்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் நாய்கள் புகுந்து, 3 மாணவர்களை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று மதியம் பள்ளி மாணவர்கள் வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது அருகில் வந்த நாய்களை மாணவர்கள் விரட்டியுள்ளனர். அப்போது, ஒரு நாய் திடீரென 6ம் வகுப்பு மாணவர் நதீம், 11; பிளஸ் 1 மாணவர் ஆனீப், 17; பிளஸ் 2 மாணவர் ரவிச்சந்திரன், 17; ஆகிய 3 மாணவர்களை கடித்தது. இதனால், அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் அலறியடித்து ஓ டினர். நாய் கடித்ததில் காயமடைந்த 3 மாணவர்களுக்கு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சங்கராபுரத்தில் பள்ளி வளாகத்திற்குள் நாய்கள் புகுந்து மாணவர்களை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ