உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிபோதையில் தகராறு ஒருவர் கைது

குடிபோதையில் தகராறு ஒருவர் கைது

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மொபைல் போனில் பாட்டை நிறுத்தச் சொன்னதால் ஏற்பட்ட தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 43; இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்னால் மொபைல் போனில் பாட்டு கேட்டுக் கொண்டே மது அருந்தினார். அப்போது சின்னக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சரவணன், 39; கிருஷ்ணசாமி மகன் சரவணன், 45; சந்தோஷ், 48; ஆகியோர் பொன்னுசாமியிடம் பாட்டை நிறுத்தும்படி கூறியுள்ளனர். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, சரவணன் தரப்பினர் பீர் பாட்டிலால் பொன்னுசாமியை தாக்கினர். படுகாயமடைந்த அவர் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொன்னுசாமி கொடுத்த புகாரின்பேரில் சரவணன், சந்தோஷ் உட்பட 3 பேர் மீது திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டன் மகன் சரவணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி