மேலும் செய்திகள்
மின் கம்பம் மீது பைக் மோதி வாலிபர் பலி
21-Oct-2024
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மருந்து பொருட்களை ஏற்றி சென்ற ஈச்சர் லாரி தேசிய நெடுஞ்சாலையோர தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானது. மதுரை பகுதியை சேர்ந்தவர் முனுச்சாமி மகன் முத்துக்கிருஷ்ணன், 32; டிரைவர். இவர் சென்னையில் இருந்து ஈச்சர் லாரியில் மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்றார்.நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக்கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயமின்றி உயிர்த்தப்பினார். தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21-Oct-2024