உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆடுகளை கொன்ற மர்ம நபர்களுக்கு வலை

ஆடுகளை கொன்ற மர்ம நபர்களுக்கு வலை

சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் மாதேஸ்வரன், 30; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டு கொட்டகையில் தனக்கு சொந்தமான 2 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று காலை பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ஆடுகள் இறந்து கிடந்தது. ஆடுகளின் உடலில் கத்தியால் குத்திய தடயம் இருந்தது. மர்ம நபர்கள் ஆடுகளை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து மாதேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை