உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மினி சரக்கு வேன் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி

மினி சரக்கு வேன் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவலுாரில் மினி வேன் மோதி ஒன்றரை வயது குழந்தை இறந்தது.திருவண்ணாமலை மாவட்டம், சங்கம் தாலுகா, பெரிய கல்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி மனைவி கவுசல்யா, 21; இவர், பொருவலுாரில் உடல்நிலை சரியில்லாத தாயை பார்க்க கடந்த 20ம் தேதி தன் ஒன்றரை வயது மகள் யாஷிகாவுடன் பொருவலுார் வந்துள்ளார்.நேற்று காலை வீட்டின் முன் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக பால் ஸ்டோரில் இருந்த பால் ஏற்றிக்கொண்டு வந்த மினி சரக்கு வேன் குழந்தை யாஷிகா மீது மோதியது.இதில் படுகாயமடைந்த குழந்தையை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை யாஷிகா இறந்தது.இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை