உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிணற்றில் விழுந்தவர் சாவு

கிணற்றில் விழுந்தவர் சாவு

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு மூப்பனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன், 55; இவர், நேற்று காலை அதே ஊரை சேர்ந்த முனுசாமி என்பவரது நிலத்தில் உள்ள தரைக்கிணற்றில் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தார்.சங்கராபுரம் தீயணைப்பு படை யினர் நேரில் சென்று 2 மணி நேரம் போராடி 50 அடி ஆழ கிணற்றில் இருந்து பாண்டுரங்கன் உடலை மீட்டனர்.சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ