உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பூச்சிமருந்து குடித்த வாலிபர் உயிரிழப்பு

பூச்சிமருந்து குடித்த வாலிபர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: உலகங்காத்தானில் வயிற்றுவலி தாங்க முடியாமல் பூச்சிமருந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் மகன் ஏழுமலை,19; தனியார் கல்லுாரியில் ஐ.டி.ஐ., இரண்டாமாண்டு படிக்கிறார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவது வழக்கம். அதேபோல், கடந்த 2ம் தேதி ஏழுமலைக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி அதிகமானதால் ஏழுமலை பூச்சிமருந்தை குடித்துள்ளார். தகவலறிந்த அவரது குடும்பத்தினர் ஏழுமலையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை