மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
09-Oct-2024
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகர ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.நகர செயலாளர் சுப்பு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமரகுரு, மாநில மகளிர் அணி செயலாளர் வளர்மதி சிறப்புரையாற்றினர். நகர அவைத் தலைவர் ஜெயபால், பொருளாளர் ஷபி, ஒன்றிய செயலாளர் இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு விழுப்புரம் மண்டல துணைச் செயலாளர் உமாசங்கர், மாவட்ட மாணவர் அணி தலைவர் பார்த்திபன். முன்னாள் ஒன்றிய செயலாளர் வினாயகமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் இளவரசன். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏசுபாதம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அசோக்குமார், வெங்கடேசன்.கவுன்சிலர்கள் ரகு, பஷீரா, பிறைமதி, வினோத், வார்டு செயலாளர்கள் சின்னதம்பி, மனோகரன், திருமலை, கணேசன், சிவா, மாவட்ட பிரதிநிதி அருண்குமார், நிர்வாகிகள் சதீஷ், பூபேஷ் ராஜ், அன்பு, பாஸ்கரன், மணிவண்ணன், புவன்குமார், கைலாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Oct-2024