உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அகஸ்தீஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கம்

அகஸ்தீஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கம்

திருக்கோவிலுார்; கூவனுார் அகஸ்தீஸ்வரர் கோவில் திருப்பணி துவக்க விழா நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் கிராமத்தில் பழமையான அகஸ்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4.8 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.திருப்பணியை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் ரமேஷ், கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பாலாஜி பூபதி, ஊராட்சி தலைவர் அய்யனார், துணைத் தலைவர் கண்ணன், செயல் அலுவலர் வேல்விழி, எழுத்தர் மிரேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ