மேலும் செய்திகள்
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்கம்
05-Jul-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த ராமராஜபுரம் கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்க விழா நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். வட்டார ஆத்மா திட்ட தலைவர் ஆறுமுகம் கலந்துகொண்டு ஊட்டச்சத்து விதைகள் கொண்ட தொகுப்புகளை, பயனாளிகளுக்கு வழங்கினார். தோட்டக்கலைத்துறை சார்பில் பழமரக்கன்று, காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.ஊராட்சி தலைவர் செல்வராஜ், துணை தலைவர் சனவுல்லா, தோட்டக்கலை அலுவலர் சோபனா, உதவி தோட்டக்கலை அலுவலர் ரகுநாதன், உதவி வேளாண் அலுவலர்கள் வினோத்குமார், பழனிவேல், ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் அருண்குமார், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் வல்லரசு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
05-Jul-2025