அ.தி.மு.க., பொதுக்கூட்டப் பணிகள் மாவட்ட செயலாளர் ஆய்வு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் நலத்திட்ட உதவிகள் வழங்க எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வருவதையொட்டி நடக்கும் ஆயத்த பணிகளை மாவட்ட செயலாளர் குமரகுரு நேரில் ஆய்வு செய்தார். திருக்கோவிலுார், ரிஷிவந்தியம் தொகுதி அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தேர்தல் ஆலோசனைகள் வழங்க வரும் 29ம் தேதி, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி திருக்கோவிலுார் வர உள்ளார். இதற்காக திருக்கோவிலுார் புறவழிச்சாலை, கீரனுார் கூட்ரோட்டில் 126 அடி உயரமுள்ள பிரம்மாண்ட கொடி கம்பம் அமைக்கும் பணியும், பொதுக் கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை மாவட்டச் செயலாளர் குமரகுரு நேற்று நேரில் ஆய்வு செய்தார். கொடிக்கம்பம் அமைப்பதற்கான பணியை பார்வையிட்டதுடன், பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை துரிதப்படுத்த நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். உடன் நகர செயலாளர் சுப்பு மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.