உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பிறந்த நாள்; குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பிறந்த நாள்; குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

கள்ளக்குறிச்சி : அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாளையொட்டி மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் நேற்று பிறந்த 22 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைகளில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் வகித்தார். ஏற்பாடுகளை மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜிவ்காந்தி செய்திருந்தார். விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, வழக்கறிஞரணி செயலாளர் சீனுவாசன், மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், மருத்துவரணி செயலாளர் பொன்னரசு பங்கேற்றனர். மேலும், துணை செயலாளர் பரமாத்மா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, தொழில்நுட்ப பிரிவு மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுப்ராயன், மணிராஜ், இளைஞரணி செயலாளர் சுரேஷ், ஜெ., பேரவை குட்டி, துணை செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ