உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று காலை கடத்துார் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கடத்துார் மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த ஸ்கூட்டரை சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக 24 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மதுபாட்டில வைத்திருந்த கடத்துார் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் ஆகாஷ், 25; என்பவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ