மேலும் செய்திகள்
மொரட்டுப்பாளையத்தில் குப்பை கொட்டுவதா?
22-Aug-2025
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. திருக்கோவிலுாரில் புதிய பஸ் நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பொது மக்களுக்கு வசதியான இடம் இல்லை எனக் கூறி, அதனை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி, சமூக ஆர்வலர் கணேஷ் தலைமையில் அனைத்து கட்சி சார்பில் சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. கணேஷ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., பா.ஜ., தே.மு.தி.க., வி.சி.க., இந்திய கம்யூ., காங்., கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று கலெக்டரை சந்தித்து மனு அளிப்பது எனவும், தீர்வு கிடைக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம், கையெழுத்து இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
22-Aug-2025