மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ரிஷிவந்தியம்,: பாசார் கிராமத்தை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் தி.மு.க., வில் நேற்று இணைந்தனர். ரிஷிவந்தியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ராஜவேல், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பாசார் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர். புதிதாக கட்சியில் சேர்ந்த நிர்வாகிகளுக்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேஷ்டி மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில், தி.மு.க., நிர்வாகிகள் ராஜூ, சிவமுருகன், செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.