உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அம்சார் அம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

அம்சார் அம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

ரிஷிவந்தியம் : ஏந்தல் கிராமத்தில் உள்ள அம்சார் அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது.வாணாபுரம் அடுத்த ஏந்தல் கிராமத்தில் உள்ள அம்சார் அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையொட்டி, அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, பொதுமக்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அங்கு, சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை