மேலும் செய்திகள்
பிரபந்த சேவை உற்சவம்
27-Jun-2025
சின்னசேலம்; சின்னசேலம் பெருமாள் கோவிலில் ஆனி மாத பூர நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது.சின்னசேலம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் ஆனி மாத பூர நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஆண்டாள் நாட்சியர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை பட்டாச்சாரியார் ஜெயகுமார் செய்து வைத்தார். அதேபோல் கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலாங்காரம் செய்து தீபாரதனை நடந்தது.இதில் பக்தர்கள் பங்கேற்று சாமித தரிசனம் செய்தனர்.
27-Jun-2025