அண்ணா அறிவகம் திறப்பு விழா
திருக்கோவிலுார்: திருக்கோவிலூரில், விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், அண்ணா அறிவகம் திறப்பு விழா நடந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திருக்கோவிலுார் செவலை சாலையில், அண்ணா அறிவக திறப்பு விழா நடந்தது. மாவட்டச் செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி அண்ணா அறிவகத்தை திறந்து வைத்தார். மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் முருகன், தொகுதி பார்வையாளர் கார்த்திகேயன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் தமிழ்மாறன், சிவா முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், விஸ்வநாதன், லுாயிஸ், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், நகர தொழில்நுட்ப அணி நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.