உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஆண்டு விழா

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சங்கர், வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் ஆண்டறிக்கை வாசித்து, வரவேற்றார். செயலாளர் கோவிந்தராஜூ, பொருளாளர் மணிவண்ணன், துணைத் தலைவர்கள் திருஞானசம்பந்தம், ரவி வாழ்த்துரை வழங்கினர்.கவிஞர் வாக்கிங், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா சிறப்புரையாற்றியனர். கல்லுாரி ஆண்டு மலர் வெளியீடு, வாழ்நெறி வழிகாட்டு மன்றம் துவக்கப்பட்டது. தொடர்ந்து, பெருமைமிகு பெற்றோர் விருது, சாதனை மாணவர் விருது, விளையாட்டு மற்றும் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கல்லுாரி ஆலோசகர் மதிவாணன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை