உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஊழல் தடுப்பு கருத்தரங்கம்

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஊழல் தடுப்பு கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஊழல் தடுப்பு கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி.எஸ்.பி., சத்யராஜ், லஞ்சம் பெறுவதும், கொடுப்பதும் குற்றச்செயல்தான். சமுதாயத்தில் இக்குற்றச்செயலை நீக்கிட, இளைஞர்களாகிய நீங்கள் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை மாணவர்களுக்கு காண்பித்தார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ராஜா, ஹேமலதா ஆகியோர் செய்திருந்தனர். கல்லுாரி துணைத் முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை