மேலும் செய்திகள்
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
13-Sep-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பட்டியல் இனமக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு செய்து வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. அதன்பபடி 2026ம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, ஆதி திராவிடர் நல ஆணையர் அலுவலகம், சென்னை அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
13-Sep-2025