உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் அரசு பள்ளியில் நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

திருக்கோவிலுார் அரசு பள்ளியில் நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நல்லாசிரியர் விருது பெற்ற கணித ஆசிரியர்க்கு பாராட்டு விழா நடந்தது. திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலை பள்ளி கணித ஆசிரியர் பாலமுருகன். இவருக்கு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஆசிரியரை கவுரவிக்கும் வகையில் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவர்கள் பங்கேற்று விருது பெற்ற ஆசிரியரையும், விருதுக்கு பரிந்துரை செய்த முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். ஆசிரியர் பாலமுருகன் ஏற்புரையாற்றினார். ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை