மவுண்ட் பார்க் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
தியாகதுருகம்: தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது.இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர். மாணவர் சக்தி 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். மாணவர் பசுபதி 585, மாணவி லாவண்யா 584 மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றனர். முக்கிய பாடங்களில் 18 மாணவ, மாணவியர் சென்டம் எடுத்துள்ளனர்.மேலும் 580 மதிப்பெண்ணுக்கு மேல் 9 பேர், 570க்கு மேல் 22 பேர், 550க்கு மேல் 51 பேர், 500க்கு மேல் 191 பேர், 450க்கு மேல் 293 பேர், 400க்கு மேல் 362 பேர் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.சிறப்பிடம் பெற்ற மாணர்வர்களுக்கு பரிசு மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கி தாளாளர் மணிமாறன் பாராட்டினார். பள்ளி முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.