உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

சங்கராபுரம் : முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் நடந்த முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மாணவர் தினேஷ், 400 மீட்டர் ஓட்டபந்தியத்தில் மாணவர் தமிழரசன் முதலிடம் பெற்றனர். மாணவர்களை கல்லுாரி முதல்வர் லலிதா பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி வாழ்த்தினார். முதல்வரின் நேர்முக உதவியாளர் சண்முகம், கல்லுாரி பொருளாளர் பாலசுப்ரமணியன், உடற்கல்வி இயக்குனர் கண்ணதாசன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை