/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ. 50 லட்சம் வர்த்தகம்
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ. 50 லட்சம் வர்த்தகம்
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ரூ. 50.18 லட்சம் வர்த்தகமானது. இ-நாம் திட்ட புதிய நடைமுறை கண்டித்து, கடந்த 30ம் தேதி முதல் 3ம் தேதி வரை வியாபாரிகளின் வேலை நிறுத்தம் நடந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக கமிட்டி இயங்குகிறது. இரண்டாம் நாளான நேற்று 1210 மூட்டை நெல், மணிலா 50, எள் 50, மக்காச்சோளம் 720, கம்பு 180 மூட்டை எனமொத்தம் 190.15 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ரூ. 50.18 லட்சம் வர்த்தகமானது.