உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காஞ்சிபுரத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு பேரணி

காஞ்சிபுரத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு பேரணி

கள்ளக்குறிச்சி : காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி நடக்கிறது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக செய்திகுறிப்பு;காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பிப்.,5 ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணியை நடத்துகிறது.அக்னிவீர் டெக்னிக்கல் (அனைத்து ஆயுதங்கள்), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 10வது தேர்ச்சி (அனைத்து ஆயுதங்கள்) அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 8 வது தேர்ச்சி (ஹவுஸ் கீப்பர் , மெஸ் கீப்பர்) (அனைத்து ஆயுதங்கள்), சிப்பாய் பார்மசி மற்றும் சோல்ஜர் டெக்னிக்கல் நர்சிங் அசிஸ்டென்ட் (கால்நடை) தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் இந்த ஆள்சேர்க்கும் பணிக்கு அந்தந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் தகுதி அளவுகோல்களின்படி பதிவு செய்யப்பட்டுள்ளனர்.விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic ல் பதிவேற்றியபடி அந்தந்த அறிவிப்பில் கூறியுள்ளபடி அனைத்து ஆவணங்களையும் கட்டாயம் கொண்டு வரவேண்டும். ஆவணங்களின் வடிவங்கள் குறித்து அறிவிப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளன.முழுமையான ஆவணங்கள் இல்லாமல் அல்லது தவறான வடிவத்தில் ஆள்சேர்ப்பு இடத்திற்கு வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் விவரங்களை சென்னையின் ஆட்சேர்ப்பு அலுவலகம்(தலைமையகம்) எண் 044-25674924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை