பெருமாள் கோவிலில் அஷ்டமி வழிபாடு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆரா ஆனந்த கிருஷ்ணருக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர், ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு அஷ்டமி தினத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. உற்சவர் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தி, தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடத்தி பஜனை பாடல்களைப் பாடி, வழிபாடுகள் நடத்தப்பட்டன.