உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கனவு இல்லங்களை கட்டிக்கொடுக்கும் ஏ.எஸ்.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன்

கனவு இல்லங்களை கட்டிக்கொடுக்கும் ஏ.எஸ்.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன்

திருக்கோவிலுார் ஏ.எஸ்.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன் நேர்மையை மூலதனமாக கொண்டு அரசு மற்றும் தனியார் துறைகளில் முத்திரை பதித்து வருகிறது. இது குறித்து அதன் உரிமையாளர் பாரதி கூறியதாவது: நீண்டநாள் அனுபவத்தின் வாயிலாக கட்டுமானத்துறையில் முத்திரை பதித்து வருகிறோம். இதன் மூலம் அரசு கட்டடங்கள்‚ மருத்துவமனை‚ பள்ளிகள்‚ பஸ் நிலையம்‚ நீச்சல் குளம்‚ தனியார் அலுவலக கட்டடங்கள்‚ அரசு குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக வீடுகளைக் கட்ட நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப கட்டட வரைபடத்தில் துவங்கி‚ வடிவமைப்பு, உள் அலங்காரம்‚ வெளி அலங்காரம்‚ வாஸ்து முறைப்படி அழகிய வீடுகளை குறிப்பிட்ட கால கெடுவிற்குள்‚ தரமாகவும்‚ நேர்மையாகவும் பணிகள் மேற்கொள்கிறோம். இதனால் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் எங்களை அணுகுவதால் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளது. கோவில்‚ பழங்கால கட்டடங்கள்‚ பழமை மாறாமல் நவீன முறையில் புதுப்பிக்கும் திறமையான தொழிலாளர்களை கொண்டிருப்பதால்‚ இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் கோவில் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறோம். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிகளை விரைவாகவும்‚ நேர்மையாகவும் முடித்து கொடுப்பதன் மூலம் நன்மதிப்பை பெற்றுள்ளோம். கட்டுமான பொருட்கள் அனைத்தும் நிறுவனத்திடமே உள்ளதால் பணிகளை விரைவாகவும்‚ குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்து கொடுக்க முடிகிறது. சிறந்த சேவையை பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் சார்பில் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளோம். எங்கள் நிறுவனத்தை 9443162476 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பாரதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ