உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிப்பதற்கு பணம் தர மறுத்தவர் மீது தாக்குதல்

குடிப்பதற்கு பணம் தர மறுத்தவர் மீது தாக்குதல்

சின்னசேலம்; சின்னசேலத்தில் பணம் தர மறுத்தவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம், வெங்கட்டாம்பேட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் பூங்கான் மகன் அழகிரி 47, இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள ஹோட்டலில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் தனது நண்பருடன் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் நடந்து வந்துள்ளார்.அப்போது சின்னசேலம், திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமு மகன் கருப்பன் 40, என்பவர் அழகிரியை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளார். அழகிரி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கருப்பன் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.புகாரில் வழக்கு பதிந்த சின்னசேலம் போலீசார் கருப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை