மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவை செய்தவர்களுக்கு விருது
கள்ளக்குறிச்சி; மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை செய்தவர்களுக்கு, தமிழக அரசு விருது வழங்க உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:சுதந்திர விழா தினத்தில் முதல்வர், தொண்டு நிறுவனங்களுக்கு 10 கிராம் தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, சான்றிதழ்களை வழங்க உள்ளார். தனியார் நிறுவனம், சமூக பணியாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, தனித்தனியாக 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இதற்கு http://awards.tn.gov.inவலைத்தள படிவத்தில் விவரங்களை பதிவு செய்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் வரும் 25ம் தேதிக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.