உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்

அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் 100 சதவீத வாக்காளர் சேர்க்கை உறுதி செய்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.தமிழ்த்துறை தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார். போதைப்பொருள் ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் சண்முகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், தாசில்தார் வெங்கடேசன் பேசினர். இதில் மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள், பக்க விளைவுகள், சமுதாயத்தில் இருந்து போதைப்பொருட்களை அகற்றும் வழிமுறைகள், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இணைதல், தேர்தலில் ஓட்டளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.முகாமில் துறைத்தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுபத்ரா, மணிசேகரன், பேராசிரியர்கள் ஜெகநாதன், கரிமுனிசா, சண்முகம், செல்வராஜ், சுகாசினி, வி.ஏ.ஓ., வித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் பாலாஜி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !