விழிப்புணர்வு ரத ஊர்வலம்
திருக்கோவிலுார் : விழுப்புரம் மாவட்ட குடும்ப நல செயலகத்தின் சார்பில், ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ரத ஊர்வலம் நடந்தது.மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துணை இயக்குனர் நளினி வரவேற் றார். அரசு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ராஜவிநாயகம் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட இணை இயக்குனர் செந்தில்குமார் விழிப்புணர்வு ரதத்தை கொடியசைத்து துவக்கி வைத்து, வரும் 3ம் தேதி திருக்கோவிலுார் அரசு தலைமை மருத்துவமனையிலும், 4ம் தேதி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையிலும் ஆண்களுக்கான நவீன தழும்பு இல்லாத குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.மிகவும் எளிதான, நம்பகமான, பாதுகாப்பான இம்முறை கத்தியின்றி, தையல் இன்றி, தழும்பின்றி, வலி இல்லாமல் 10 நிமிடங்களில் பயிற்சி பெற்ற சிறப்பு நிபுணர்களால் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார். மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர்.