மேலும் செய்திகள்
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
25-Feb-2025
கள்ளக்குறிச்சி : முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் தீ விபத்து தடுப்பு மற்றும் அவசர கால நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தாளாளர் அகமதுல்லா தலைமை தாங்கினார். தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் அல்லாபக் ஷ் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர் தீயணைப்பு துறை அலுவலர்கள் செந்தில்குமார், சக்திவேல் ஆகியோர் தீ விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் வழிமுறை, மழைக்காலங்களில் ஆறு, அணை உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கியவர்களை எப்படி காப்பாற்றுவது. பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் விதம் உட்பட அவசர கால நடவடிக்கைகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கினர்.நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
25-Feb-2025