மேலும் செய்திகள்
பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை
30-Apr-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர், ஆஸ்பிட்டல் சாலையில் உள்ள பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத விசாக நட்சத்திர பெருவிழா கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 9ம் நாளான நேற்று காலை வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். காலை 8:30 மணிக்கு பக்தர்கள் 'அரோகரா' கோஷம் முழங்க, வடம் பிடித்து கீழையூர், திருக்கோவிலுார் நகரின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர்.
30-Apr-2025