உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு

சங்கராபுரம்: சங்கராபரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. இதனைத் தடுக்க சுகாதாரத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்கள் பயன்படுத்தலைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயப்படுத்துவதற்கு தடை விதித்தது.இதையொட்டி சங்கராபுரம் பகுதியில் கடைகளில் அரசு அதிகாரிகள்அதிரடி சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக தன்னார்வ அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு சங்கராபுரம் பகுதியில் அனைத்து கடைகளிலும் அதிகரித்துள்ளது. டீ கடைகளில் டீ கூட தடை செய்யப்பட் பிளாஸ்டிக் பைகளில் வழங்கப்படுகிறது. ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதால் நாளுக்குநாள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிரித்து வருகிறது.பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ