மதுவிலக்கு அமலாக்க சட்ட திருத்தம் கல்வராயன்மலையில் பேனர் அமைப்பு
கள்ளக்குறிச்சி : சேராப்பட்டு கிராமத்தில் போலீஸ் சார்பில் மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்டங்கள் குறி த்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பேனர் வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி எஸ்.பி., மாதவன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் மதுவிலக்கு சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, சேராப்பட்டு ரேஷன்கடை அருகே கிராம பொதுமக்களுக்கு மதுவிலக்கு அமலாக்க சட்ட திருத்தங்கள் பற்றியும் அதற்குண்டான தண்டனைகள் குறித்து விளக்கினர். அதில், சாரா யம் காய்ச்சுதல், கடத்தி செல்லுதல் மற்றும் விற்பனை செய்வதல், சாராயம் காய்ச்ச தேவைப்படும் வெல்லம், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைப்பதும் குற்றம் என்றும், தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட திருத்தப்படி இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மதுவிலக்கு குற்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால் இது குறித்த தகவலை 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மதுவிலக்கு தொடர்பாக விழிப்புணர்வு பேனரும் அங்கு வைக்கப்பட்டது. அப்போது, ஏடி.எஸ்.பி., திருமால் மற்றும் போலீசார் உட னிருந்தனர்.