உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 10,ம் வகுப்பு தேர்வில் சாதனை புரிந்த பாரதி பள்ளி மாணவியருக்கு பாராட்டு 

10,ம் வகுப்பு தேர்வில் சாதனை புரிந்த பாரதி பள்ளி மாணவியருக்கு பாராட்டு 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில்,10,ம் வகுப்பு தேர்வில் சாதனை புரிந்த பாரதி பள்ளி மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி பாரதி கல்வி நிறுவன மாணவ, மாணவியர் 10,ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று கல்வி சாதனை படைத்துள்ளனர். இதில் மாணவி மேஷவர்தினி 500க்கு 494 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை புரிந்துள்ளார். இவர் தமிழ் 99, ஆங்கிலம் 99, கணிதம் 97, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 மதிப்பெண் எடுத்துள்ளார். தொடர்ந்து மாணவி சாய்ஸ்ரீ 492 பெற்று, 2,ம் இடம்; மாணவிகள் வித்யாஸ்ரீ, விஸ்விதா ஆகியோர் 487 மதிப்பெண்கள் பெற்று, 3,ம் இடம் பிடித்துள்ளனர். அறிவியல் பாடத்தில் 22 பேர் 'சென்டம்' எடுத்துள்ளனர். பள்ளியில் 400க்கு மேல் 36 மாணவர்கள் பெற்றுள்ளனர். கல்வி சாதனை படைத்த மாணவிகளை கல்வி நிறுவனங்களின் தாளாளர் கந்தசாமி, ஆக்ஸாலிஸ் பள்ளி தாளாளர் பரத்குமார் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர்கள் ராமசாமி, சுமதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி