உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு ஆண்கள் பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா

அரசு ஆண்கள் பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கமருதீன், உதவி திட்ட அலுவலர் பழனியாபிள்ளை, ஒன்றிய சேர்மன் திலகவதி, பேருராட்சி சேர்மன் ரோஜாரமணி முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் உதயசூரியன் எம்.எல்.ஏ., 240 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் துரை, பேரூராட்சி துணைச் சேர்மன் ஆஷா பீ உட்பட பலர் பங்கேற்றனர்.உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ