உள்ளூர் செய்திகள்

பைக் மோதல்: ஊழியர் பலி

சங்கராபுரம், ; சங்கராபுரம் அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.சங்கராபுரம் அடுத்த பெரியகொள்ளியூரை சேர்ந்தவர் ரமேஷ், 45; இவர் சைக்கிள் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை பைக்கில் சங்கராபுரம் கடைக்கு சென்று கொண்டிருந்தார். எஸ்.குளத்துார் முருகன் கோவில் அருகில் வந்த போது, எதிரே சித்தாதுாரை சேர்ந்த மதன்குமார், 22; என்பவர் வேகமாக ஓட்டி வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரமேஷ், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கராபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மதன்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ