உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் சேர்ந்த சேகர் மகன் சரவணன், 38; இவர் கச்சேரி சாலையில் உள்ள போட்டோ ஸ்டுடியோ கடை நடத்தி வருகிறார். கடந்த 18ம் தேதி காலை கடை முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு, பகல் 2.30 மணிக்கு மீண்டும் வந்து பார்த்தபோது பைக் மாயமாகி இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி