உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்ட பைக் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்துார் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் மகன் பொன்ராஜ், 26; இவர், கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் வங்கியில் பணிபுரிகிறார். கடந்த 11ம் தேதி இரவு தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி சென்றார். மறுநாள் காலை பார்த்த போது பைக் மாயமாகி இருந்தது. பொன்ராஜ் அளித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !