உள்ளூர் செய்திகள்

பைக்குகள் திருட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் 2 பைக்குகள் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரியை சேர்ந்தவர் பழனி மகன் சஞ்சய்காந்தி, 42; இவர், கடந்த 27ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி வைத்திருந்த பைக் திருடுபோனது. கள்ளக்குறிச்சி நீலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜான்பால். இவர், கடந்த 29ம் தேதி தனது வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ