அரகண்டநல்லுாரில் பைக் திருடியவர்கள் கைது
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் தபோவனம் அருகே நேற்று முன்தினம் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை மறித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தனர். இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்தபோது, திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமாத்துர் அடுத்த வள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாசாமி மகன் விஜயகாந்த், 29; நாச்சாமலையை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ஆனந்தராஜ், 23. என தெரியவந்தது. இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் வீரபாண்டி கிராமத்தில் சேட்டு மகன் சரண்ராஜ் என்பவருக்கு சொந்தமான பைக்கை திருடி சென்றதும், திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதிற்காக மீண்டும் பைக்கில் வந்ததும் தெரியவந்தது. அரகண்டநல்லுார் போலீசார் இருவரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.