மேலும் செய்திகள்
பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 30 பயணியர் படுகாயம்
11-Apr-2025
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் பா.ஜ., நிர்வாகி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம், அய்யம்பாளையம் அடுத்த ஆதியாண்டாள் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 61; பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய முன்னேற்ற பிரிவு மண்டல தலைவராக இருந்தார். நேற்று காலை 10:30 மணியளவில், உளுந்துார்பேட்டை அடுத்த உ.நெமிலி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றவர், அங்குள்ள பால பாக்கவாட்டு கட்டை மீது உட்கார முயன்றார். அப்போது கால் தவறி பள்ளத்தில் விழுந்து இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
11-Apr-2025