உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பா.ஜ., அரசின் சாதனை விளக்க கூட்டம்

பா.ஜ., அரசின் சாதனை விளக்க கூட்டம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் பா.ஜ., அரசின் 11 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் நடந்தது.மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடந்த மண்டல, மாவட்ட அளவிலான கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார், மாநில நிர்வாகி பாண்டியராஜன், மாவட்ட நிர்வாகிகள் மில்ஹரி, சுந்தரமூர்த்தி, கண்ணன், வேலாயுதம், கோவிந்தசாமி, ராஜேஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர் தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், 11 ஆண்டு கால சாதனைகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !