உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலத்தில் பா.ஜ.,வினர் தேசிய கொடி ஊர்வலம்

சின்னசேலத்தில் பா.ஜ.,வினர் தேசிய கொடி ஊர்வலம்

கள்ளக்குறிச்சி; சின்னசேலத்தில் பா.ஜ.,வினர் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், தேசிய கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், சம்பத் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி வரவேற்றார்.காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து சின்னசேலம் கூகையூர் சாலையில் இருந்து, தேசியக்கொடி ஏந்தி பேரணியாக பஸ் நிலையம் வரை கோஷம் எழுப்பி சென்றனர். பேரணியில் மாநில நிர்வாகிகள் ஸ்ரீசந்த், இந்தியன் துரைவேல், செந்தில் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் மில் ஹரி, முத்து, ராமசாமி, மகேந்திரன், குழந்தைவேலு, மாலினி, பெரியசாமி, விநாயகம், தமிழ்ச்செல்வி, நாகராஜ், மாரிமுத்து, சீனிவாசன், முருகன், அன்பழகன், ஐயப்பன், வெற்றி வேல் முருகன், அங்கமுத்து ராஜ்குமார், அண்ணாமலை, தேவராஜ், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஜெயம் கோபி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை