உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில், பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ., மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர்கள் முருகன், ஏழுமலை, பட்டியல் அணி மாநில செயலாளர் சண்முகம், கோட்ட பொறுப்பாளர் பாண்டியராஜ், மாரியாப்பிள்ளை முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சிவசக்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மக்களின் நிதிகளில் தமிழக அரசு முறைகேடு செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். 20க்கும் மேற்பட்ட பட்டியல் இன ஊராட்சி தலைவர்கள் இருந்தும் அவர்கள் யாரையும் தி.மு.க., அரசு தேசிய கொடி ஏற்ற அனுமதிப்பதில்லை. அத்துடன் பட்டியலின மக்கள் படிக்கும் பள்ளி, கல்லுாரிகள், அரசு விடுதிகளில் பராமரிப்பு செலவு தொகையாக ஒரு மாணவருக்கு ரூ.50 மட்டுமே நிதி ஒதுக்கிறது. ஆனால் காவல்துறையில் இருக்கும் மோப்ப நாய்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 செலவு செய்கிறது. எனவே பட்டியலின, பழங்குடியின மக்களை வஞ்சிக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மா வட்ட பிரிவு தலைவர்கள் ராமச்சந்திரன், கண்ணன், துரை, குழந்தைவேல், கோவிந்தன், சதீஷ், சங்கர், பிரேம்ராஜ், சங்கர சுப்பிர மணி, மாவட்ட பிரிவு நிர்வாகி கள் சீனிவாசன், ஏழுமலை, மருது, மு த்துலிங்கம், அஜித்குமார், பாலு ச்சாமி, தேவரத்தினம், மாரிமுத்து, செந்தில், மணிகண்டன், இளையராஜா, அர்ஜுனன், முருகன், நதியா, ஜோதி, ஒன்றிய தலைவர்கள் முத்தையன், சத்யா, சம்பத், சிவக்குமார், விஸ்வநாதன், வழக்கறிஞர் பகிரதன், செல்வராஜ் பங்கேற் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை