உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பா.ஜ., சார்பில் திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டி அகல் விளக்கில் தீபச்சுடர் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில், பழைய மாரியம்மன் கோவில் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். ஆன்மிகப்பிரிவு மாவட்ட தலைவர் தர்மசிங் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சர்தார் சிங், துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, வர்த்தக பிரிவு துணைத் தலைவர் கோவிந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என அகல் விளக்கு தீபத்தை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் பகிரதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை