நெடுஞ்சாலையில் தடுப்பு சீரமைப்பு
கள்ளக்குறிச்சி: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கட்டையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.உளுந்துார்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.நீலமங்கலம் கிராம மக்கள் கள்ளக்குறிச்சி வந்து செல்வதற்கு ஏரிக்கரை சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் தேசிய நெடுஞ்சாலையை எவ்வித வாகனங்களும் கடந்து செல்லாதவாறு சாலையின் நடுவே தடுப்பு கட்டை அமைக்கப்பட்டது.இதனையடுத்து வாகன ஓட்டிகள் மேம்பாலத்தை சுற்றி சென்று சர்வீஸ் சாலை வழியாக செல்ல வேண்டியநிலை ஏற்பட்டது. இதற்கு சிரமப்பட்டு ஆசாமிகள் சிலர், சாலையின் நடுவே தடுப்பு கட்டையின் இரு திசையிலும் இரு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் உடைத்தனர். தொடர்ந்து ஆபத்தை உணராமல் வாகன ஓட்டி கள் பலர் அவ்வழியாக சென்று வந்தனர்.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி போக்குவரத்து போலீசார், சாலையில் உள்ள தடுப்பு கட்டையை சீரமைத்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகாய் அலுவலகத்தில் அறிவுறுத்தினர்.தொடர்ந்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளையராஜா முன்னிலையில் நகாய் ஊழியர்கள் சாலையின் தடுப்பு கட்டை யின் இரு புறங்களையும் கான்கிரீட் கலவை கொட்டி அடைத்தனர்.